சிவகங்கை: புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஏ2 பால் அதிகஅளவில் புலிக்குளம் மாடுகளில் இருக்க வாய்ப்புள்ளது; இதை கண்டறிய ஆராய்ச்சி நடந்து வருகிறது, என கால்நடை பராமரிப்பு மருத்துவ பல்கலை துணைவேந்தர் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடந்த புலிக்குளம் மாடுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியது : ஜல்லிக்கட்டு போராட்ட எழுச்சியால் நாட்டு மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலிக்குளம் இன மாடு, சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டது. இதற்காக மானாமதுரை மாங்குளம் அருகே 2 கோடி ரூபாயில் 44 ஏக்கரில் ஆராய்ச்சி பண்ணை அமைய இருக்கிறது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டதால் விரைவில் பணிகள் துவங்க உள்ளது.

புற்றுநோயை கட்டுப்படுத்தும் ‘ஏ2’ பால் நாட்டு மாடுகளில் இருந்து கிடைக்கிறது. இந்த பால் புலிக்குளம் மாடுகளில் அதிகளவில் இருக்க வாய்ப்பு உள்ளது. ஒரு லிட்டர் பால் 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது.புலிக்குளம் மாட்டின் பால் உற்பத்தியை அளவீடு செய்ய மத்திய அரசின்
ராஷ்ட்ரீய கோகுல மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக அமையும் ஆராய்ச்சி பண்ணையில், புலிக்குளம் மாடுகளை விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.அங்கு மாடுகளின் உடலமைப்பு, வளர்ச்சிக் கான இரை, பால் சுரப்பு போன்றவை ஆய்வு செய்யப்படும். இதன்மூலம் புலிக்குளம் மாடுகள் மேம்படுத்தப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும் என துணைவேந்தர் திலகர் தெரிவித்தார்.

 

Source : dinakaran

Comments

comments


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *